புதுவையில் துணைமுதல்வர் பதவியா? அதிருப்தியில் ரங்கசாமி!

Photo of author

By Sakthi

புதுச்சேரி சட்டசபை தேர்தலின் முடிவு வெளியாகி 17 நாட்கள் கடந்து போய்விட்டன. இந்த நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்று 12 நாட்கள் ஆகி இருக்கிறது. ஆனாலும் அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் யாரும் இதுவரையில் பதவி ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சென்ற பத்தாம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மூன்று நியமன சட்டசபை உறுப்பினர்களை மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்றுக்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என்று தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை வைத்து வருகின்றது. ஆனாலும் முதலமைச்சரும் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி புதுவையில் துணை முதலமைச்சர் பதவி என்ற ஒரு பதவியை உருவாக்க இயலாது என்று தொடர்ச்சியாக மறுத்து வருகிறார் என சொல்லப்படுகிறது.

தற்போது வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்வதற்கு தற்காலிக சபாநாயகராக என்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் லட்சுமி நாராயணனை துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தார் முதலமைச்சர் ரங்கசாமி. அந்தப் பரிந்துரையை துணைநிலை ஆளுநர் இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு தடை விதிப்பது பாரதிய ஜனதா கட்சியின் தலைமை தான் என்று சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அவர்கள் பக்கத்தில் விசாரணை செய்து சமயத்தில் எதிர்காலத்தில் புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் திட்டம் இருக்கிறது. பாஜகவிற்கு ராஜ்யசபா எம்பி பதவி முக்கியம் என்ற காரணத்தால், சட்டசபை உறுப்பினர்கள் பலத்துக்காக நியமன சட்டசபை உறுப்பினர்கள் பதவியை உருவாக்கி இருக்கிறோம். அந்த தகவல் முதலமைச்சர் ரெங்கசாமிக்கு தெரியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதோடு இன்னும் நான்கு தினங்களில் முதல் அமைச்சர் ரங்கசாமி உடன் பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றை முடித்துவிட்டு சுமுகமாக வரும் 24 அல்லது 25 ஆகிய தேதிகளில் சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்வார்கள். அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்வார்கள் எனவும் பாரதிய ஜனதா கட்சியின் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.