கொரோனாவின் கோரத்தாண்டவம்! ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா!

0
69

இந்தியாவைப் பொருத்தவரையில் ஒரே நாளில் இரண்டு லட்சத்து 67 ஆயிரத்து 334 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. தமிழகம், கேரளா, புதுவை, மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் பெரும் அளவிற்கு உயர்ந்து கொண்டு வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவில் ஒரே தினத்தில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. நேற்றுமுன்தினம் 2.86 லட்சம் இன்று இந்த நிலையில், நேற்று 2.63 லட்சமாக இருந்தது. இந்த பாதிப்பு இன்று 2.67 லட்சம் ஆக குறைந்திருக்கிறது. இதன் மூலமாக இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் மொத்த பாதிப்பு 2 கோடியே 52 லட்சத்து 28 ஆயிரத்து 996 இல் இருந்து 2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்து 330 ஆக அதிகரித்திருக்கிறது இதேபோல 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 629 பேர் இந்த நோயினால் உயிரிழந்து இருக்கிறார்கள்.

இதன் வழியாக இந்த நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்து 719ல் இருந்து, 2,83_248 ஆக அதிகரித்து இருக்கிறது. அதேபோல இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே தினத்தில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 251 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து குணம் அடைந்து இருக்கிறார்கள். இதன் மூலமாக இந்த நோய் தொற்றிலிருந்து குணமானவரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 512 இல் இருந்து இரண்டு கோடியே 19 லட்சத்து 86 ஆயிரத்து 363 ஆக அதிகரித்து இருக்கிறது.