கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.3000, ரூ.1000 தீபாவளி போனஸ்-அரசு அசத்தல் அறிவிப்பு.!!

Photo of author

By Vijay

கட்டிடத் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரமும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயும் தீபாவளி பரிசுக் கூப்பனாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், “புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கப்படும். இந்தாண்டு இலவச வேட்டி சேலைக்கு பதிலாக 18 வயதைக் கடந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 500 வீதம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் 1,24,412 பேருக்கு ரூபாய் ‌.6,22,06000 அவர்களின் வங்கி கணக்கில் இன்றுமுதல் வரவு வைக்கப்படும்.

மேலும், கட்டிடத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூபாய் 3ஆயிரமும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூபாய் ஆயிரமும் தீபாவளி பரிசுக்கூப்பனாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.