தீபாவளிக்கு ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை-அரசு சூப்பர் அறிவிப்பு.!!

0
209

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது, கொரோனா தொற்று வருவதால் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது

அதன்படி, நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் வாரம் வரவுள்ள நிலையில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனைய பிராந்தியங்களில் அடுத்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர்-1 புதுச்சேரி விடுதலை நாள், நவம்பர்-2 கல்லறை தினம், நவம்பர் 3, 4 தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பல தனியார் பள்ளிகளும் தீபாவளிப் பண்டிகையையொட்டி அடுத்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவித்துள்ளது.

மேலும், தீபாவளிக்கு அடுத்த நாள் வழக்கமாக விடுமுறை அளிக்கப்படும் என்பதால் வரும் எட்டாம் தேதி முதல் பள்ளி கல்வித்துறையின் உத்தரவுபடி பள்ளிகள் துவங்கும் என்று கூறப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தீபாவளிக்கு பிறகு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்றும் இதர வகுப்புகளுக்கு முழு விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Previous articleசென்னையில் புதிதாக திறக்கப்படும் இரண்டு மேம்பாலங்கள்! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
Next articleதிரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியீடு! முதலமைச்சர் தலைமையில் கூட இருக்கும் அவசரக் கூட்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here