அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த நாகூரான்-செல்வி தம்பதி. இவர்களின் 7 வயது மகள் சம்பவ தினத்தன்று வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் இரவு 7 மணி வரை வீட்டிற்கு வராத காரணத்தால் அக்கம்பக்கத்தில் தேடியபோதும் கிடைக்கவில்லை.
இதையடுத்து தனது மகள் காணாமல் போனது பற்றி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை நடத்திய தேடுதல் விசாரணையில் சிறுமியின் வீட்டிலிருந்த சிறிது தூரத்தில் இருந்த குளத்தின் அருகே அர்ந்த பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பக்கத்து வீட்டு நபரான ராஜா என்பவரை காவல்துறை கைது செய்தனர்.
இந்நிலையில் ராஜாவை மருத்துவ பரிசோதனஐக்காக புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது கைவிலங்கை அவிழ்த்துவிட்டு காவல்துறை பிடியில் இருந்து ராஜா தப்பியோடினான். தப்பியோடிய குற்றவாளி ராஜாவை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்துள்ளதாக புதுக்கோட்டை எஸ்.பி.பாலாஜி பாலாஜி சரவணன் தெரிவித்தார். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.