புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்.. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.16500 சம்பளத்துடன் வேலை ரெடி!!

0
218

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்.. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.16500 சம்பளத்துடன் வேலை ரெடி!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நலவாழ்வு சங்கம் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கின்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.

இந்த காலிப்பணியிடங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் நிரந்தரப் பணியாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12-09-2023 வரை வரவேற்கப்படுகிறன.

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்ட துணை இயக்குநர்,சுகாதாரப் பணிகள் அலுவலகங்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்கள் வரவேறாகப் படுகின்றனர்.

வயது வரம்பு: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 45க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் முறை

தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் விண்ணப்பத்தார்கள் https://pudukkottai.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு உரிய சான்றிதழ்களுடன் ‘முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,முள்ளூர்,புதுக்கோட்டை’ என்ற முகவரிக்கு தபால் முறையில் அனுப்ப வேண்டும்.இல்லாவிட்டால் நேரடியாக சென்று விண்ணப்பத்தை அளிக்கலாம்.

கடைசி தேதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 12.09.2023 (மாலை 5.00 மணி வரை) அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்று வெளியான தங்கம் விலை நிலவரப் பட்டியல்!
Next articleபுற்றுநோயுடன் போராடும் பெண்!!! அந்த பெண்ணுக்கு மொட்டை அடித்துவிட்டு தானும் மொட்டை அடித்த கணவர்!!! இணையத்தில் வீடியோ வைரல்!!!