என் ஆர் காங்கிரஸ் கட்சியில் வேலூரில் இருந்து பலரும் வந்து இணையக்கூடிய நிகழ்ச்சியானது புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவில் வளாகத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் பேசிய புதுவை முதல் மந்திரி ரங்கசாமி அவர்கள் விஜய உடனான கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.
நிகழ்ச்சியில் பேசிய புதுவை முதல் மந்திரி ரங்கசாமி தெரிவித்திருப்பதாவது :-
புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய பொழுது தமிழகத்திலும் தொடங்க வேண்டும் என தான் நினைத்திருந்ததாகவும், ஆனால் அதற்குள் புதுவையில் ஆட்சி அமைத்து விட்டதால் தமிழகத்தில் இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்த அவர், வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடலாம் என முடிவு செய்திருப்பதாகவும் இதற்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டத்தில் உள்ளவர்கள் தங்களுடைய என் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது மட்டுமல்லாது மேலும் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து தங்களுடைய கட்சியில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக, விஜய் தன்னுடைய நண்பர் என்பதால் அடிக்கடி அவருடன் அலைபேசியில் அழைத்து பேசிக் கொள்வோம் என்றும் இதுவரை கூட்டணி கட்சி குறித்து இருவரும் விவாதிக்கவில்லை என்றும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது குறித்த முக்கியமான முடிவுகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் புதுவை முதல் மந்திரி ரங்கசாமி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.