நம் முகத்திற்கு அழகு சேர்க்கும் கண்கள் வீங்கி காணப்பட்டால் பார்க்க நன்றாக இருக்காது.நிம்மதியற்ற தூக்கம்,கண் எரிச்சல் போன்ற காரணங்களால் கண்கள் வீங்கிவிடுகிறது.இந்த கண் வீக்கத்தை வத்த வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை முயற்சி செய்யுங்கள்.
தீர்வு 01:-
1)வெள்ளரிக்காய்
2)தயிர்
ஒரு பிஞ்சு வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு இதை கிண்ணத்தில் கொட்டி இரண்டு தேக்கரண்டி பசுந்தயிர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.இந்த க்ரீமை கண்களை சுற்றி அப்ளை செய்தால் கண் வீக்கம் வத்தும்.
தீர்வு 02:-
1)காபி தூள்
2)தண்ணீர்
ஒரு தேக்கரண்டி காபி தூளை கிண்ணம் ஒன்றில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு இதை கண்களை சுற்றி அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.பிறகு குளிர்ந்த நீரில் கண்களை கழுவினால் வீக்கம் வத்தும்.
தீர்வு 03:-
1)கற்றாழை ஜெல்
2)வெந்தயம்
கற்றாழை செடியில் இருந்து பிரஸ் கற்றாழை ஜெல் எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.அதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை 8 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து கற்றாழை ஜெல்லை அரைத்து வெந்தய பேஸ்ட்டில் கலந்து கொள்ளவும்.இதை கண்களை சுற்றி அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவினால் கண் வீக்கம் குறையும்.
தீர்வு 04:-
1)பாதாம் எண்ணெய்
கண்களை சுற்றி வீங்கி இருந்தால் பாதாம் எண்ணெயை கொண்டு வீங்கிய பகுதியில் மசாஜ் செய்யவும்.இப்படி செய்து வந்தால் கண் வீக்கம் குறையும்.