எம்ஜிஆர் ஜெயலலிதா இல்லை.. இதெல்லாம் பச்ச துரோகம்!! எடப்பாடியை ரைட் லெப்ட் வாங்கும் அதிமுக முன்னாள் நிர்வாகி!!

0
6
Pugazhendi interview about the decision given by the Election Commission on the issue of double leaf
Pugazhendi interview about the decision given by the Election Commission on the issue of double leaf

ADMK: அதிமுகவில் இருந்து வெளியேறிய புகழேந்தி இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு ஒதுக்கீடு செய்தது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதன்படி இதனை முறைப்படி விசாரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமலே தேர்தல் ஆணையமானது காலம் தாழ்த்தி வந்தது. இதனை கண்டித்து புகழேந்தி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய போது இனி இவ்வாறான தவறு நடக்காது என்று தேர்தல் ஆணையம் சார்பாக கூறியிருந்தனர்.

இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில், இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக உட்கட்சி விவகாரம் என தேர்தல் ஆணையம் தலையிட்டு விசாரிக்க உரிமை இல்லை. அவரின் மனு ஏற்று இடைக்கால தடை அளித்து உத்தரவிட்டிருந்தனர். இந்த உத்தரவை தவிர்க்கும் படி புகழேந்தி சார்பாக மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வருவது என தொடங்கி உட்கட்சி விவகாரங்கள் வரை என அனைத்திலும் தேர்தல் ஆணையம் தலையிட உரிமை இல்லை.

அதற்கு முழு அதிகாரமும் உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டும்தான் எனக்கு கூறினர். ஆனால் இதற்கு எதிராக வாதிட்ட புகழேந்தி மற்றும் ரவீந்திரநாத் சார்பான வழக்கறிஞர், தற்பொழுது கட்சிக்குள் பெரும்பான்மையான நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் உள்ளதால் கட்டாயம் தேர்தல் ஆணையம் விசாரிப்பது சரி என்று கூறியுள்ளார். அந்த வகையில் அதிமுக உட் கட்சி சார்ந்த பிரச்சனை என தொடங்கி இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது வரை அனைத்தையும் விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளனர். இது புகழேந்தி ரவீந்திரநாத் மற்றும் ஓபிஎஸ் க்கு சாதகமாக அமைந்துள்ளது.

மேற்கொண்டு புகழேந்தி பேட்டி அளித்த போது, தற்போது நடந்து முடிந்த பாராட்டு விழாவில் எடப்பாடிக்கு அனைத்து மரியாதையும் செலுத்தினார்கள் ஆனால் அவரை அறிமுகம் செய்த எங்கள் மறைந்த என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்களான புரட்சி தலைவி அம்மா மற்றும் எம்ஜிஆர் அவர்களின் புகைப்படங்களை வைக்காததை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இது பச்ச துரோகம், மேலும் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மக்ளிச்சிகரமானதாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

Previous articleஎடப்பாடிக்கு அடி மேல் அடி.. கை நழுவும் இரட்டை இலை!! ஒட்டு மொத்த குஷியில் ஓபிஎஸ்!!
Next articleஎம்ஜிஆர் அம்மா வை விடுங்க.. அவன் பெயருக்கு கீழ் என் பெயரா!! எடப்பாடி தான் காரணம்.. வெளியான பரபர தகவல்!!