விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பூசணி விதை! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன?
பூசணிக்காய் பல வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. இந்த பூசணிக்காயில் விட்டமின்கள், நார்ச்சத்து, ஒமேகா 3 அமிலம், துத்தநாகம் சத்துக்கள் போன்று பல சத்துக்கள் இருக்கின்றது. அதே போல பூசணிக்காயில் உள்ள விலையும் மிகவும் சத்து வாய்ந்தது.
பூசணிக்காயின் விதைகளில் பாஸ்பரஸ், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாமிரம், துத்தநாகம் ஆகிய சத்துக்கள் இருக்கின்றது. இந்த சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்கு கிடைப்பதால் உடல் வலிமை பெறுகின்றது. இந்த பதிவில் பூசணி விதைகளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று. பார்க்கலாம்
பூசணிக்காய் விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…
* பூசணிக்காயின் விதைகளில் ஜிங் சத்து அதிகளவில் இருக்கின்றது. இதனால் ஆண்கள் பூசணிக்காயின் விதைகளை ஆண்கள் கட்டாயமாக சாப்பிட வேண்டும். ஏன் என்றால் பூசணிக்காயின் விதைகள் ஆண்களின் ஹார்மோன்களுக்குத் தேவையான சத்துக்கள் அடங்கியுள்ள பொருளாகும். இந்த பூசணிக்காயின் விதைகளை ஆண்கள் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
* பூசணிக்காயின் விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
* பூசணிக்காயில் அதிகளவு பாஸ்பரஸ் சத்துக்கள் இருக்கின்றது. இதனால் பூசணிக்காயை சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கின்றது. மேலும் உடலில் மெட்டபாலிசத்தை தூண்டுகின்றது.
* பூசணிக்காயின் விதைகளில் மெக்னீசியம் சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. இதனால் பூசணிக்காயை சாப்பிட்டு வந்தால் இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
* பூசணிக்காயில் ஒமேகா 3 அமிலம் அதிகளவில் இருக்கின்றது. இதனால் பூசணிக்காயை சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும்.
* இந்த பூசணிக்காயின் விதைகளை நாம் சாப்பிட்டு வந்தால் இரத்த நாளங்களில் ஏற்படும் தளர்வுகள் குணமடைகின்றது.
* நாம் தொடர்ந்து பூசணிக்காயின் விதைகளை சாப்பிட்டு வந்தால் குடலுக்கு எந்தவாதமான பிரச்சனையும் வராது. மேலும் குடல் சாதாரணமாக எந்தவிதமான நடவடிக்கையும் பிரச்சனைகளும் இல்லாமல் செயல்படுவதற்கு உதவியாக இருக்கின்றது