சென்னை HCL நிறுவனத்தில் ஆண் மேலதிகாரியை எதிர்த்து மூன்று பெண் ஊழியர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் அளித்திருந்தனர். அவர்கள் அப்புகாரில், நாற்காலிக்கு பின் மிக அருகில் நின்று கொண்டு கண்காணிக்கிறார். மேலும் ஆபாசமாக பேசுகிறார். அவரது பார்வையே பயமாக உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தனர். HCL நிறுவனத்தில் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் விஷாகா குழுவிடம் இந்தப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை விசாரித்த விசாக குழுவும், குற்றத்தில் ஈடுபட்ட மேல் அதிகாரிக்கு எந்த ஒரு சம்பள உயர்வும், பதவி உயர்வும் வழங்கக் கூடாது என HCL நிறுவனத்திடம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு HCL நிறுவனமும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை எதிர்த்த அந்நபர் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவிட்டுள்ளார். அவர் அவ்வழக்கில் என் மீது தாக்கப்பட்ட வழக்கில் என் சைடு உள்ள நியாயம் எதுவும் கேட்கப்படவில்லை என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கில் ஒரு ஆணின் பார்வையில் இருந்து பார்ப்பது சரியாக அமையாது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பார்வையில் இருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறி அவ்வழக்கின் மேல்விசாரணை செய்து நியாயமான தீர்ப்பு வழங்கியுள்ளார்.