மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக! பஞ்சாப் மாநிலத்தில் மாறும் அரசியல் வரலாறு!

Photo of author

By Sakthi

பஞ்சாப் மாநிலத்தில் சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது இந்த நிலையில் கேப்டன் அமரிந்தேர் சிங்அந்த மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த மூன்றாண்டு காலமாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்திருந்த நிலையில், அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கடந்த 18ஆம் தேதி முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரிந்தேர் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து நேற்றையதினம் பஞ்சாப் மாநில முதலமைச்சராக சரண் சிங் காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் கடந்த 18ஆம் தேதி மாலை முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கு தெரியாமல் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாகத்தான் கோபமுற்ற அமரீந்தர் சிங் தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு தற்போது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சரண்சிங் சன்னி காங்கிரஸ் கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து வழக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் என்றும் சொல்லப்படுகிறது. பஞ்சாப் விவகாரங்களுக்கான மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் புதிய சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரின் அதாவது முதலமைச்சரின் பெயரை அறிவித்து இருக்கின்றார்.

இந்தநிலையில், சரண்சிங் சனி மற்றும் அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் உள்ளிட்டோர் சண்டிகரில் இருக்கின்ற ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை நேற்றைய தினமும் சந்தித்தார்கள். புதிய ஆட்சியமைக்க சரண்ஜித்சிங் சன்னி உரிமை கோரியிருக்கிறார்.

அதன் பின்னர் காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் ஒருமித்த முடிவிற்குப் பின்னர் நாங்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க எங்களுடைய உரிமையையும் முன் வைத்திருக்கின்றோம். பதவியேற்பு விழாவிற்கு ஆளுநர் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி அதாவது இன்றைய தினம் காலை 11 மணி அளவில் வர இருக்கிறார் என்று பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கின்ற சரண்ஜித்சிங் சன்னி கூறியிருக்கின்றார்.

பஞ்சாப் மாநில அரசியல் வரலாற்றிலேயே தலித் இனத்தைச் சார்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ள இருப்பது இதுதான் முதன்முறை. சரண்சிங் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலித் வாக்குகளை பெறுவதற்கான முயற்சியாக இது கருதப்படுகின்றது. பஞ்சாப் மாநிலத் மக்கள்தொகையில் தலித் மக்கள் தொகை 32 சதவீதம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

தற்சமயம் எதிர்க்கட்சியாக பஞ்சாப் மாநிலத்தில் செயல்பட்டுவரும் சிரோமணி அகாலி தான் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் நாங்கள் ஆட்சி அமைத்தால் துணை முதலமைச்சர் பதவிக்கு தலித் இனத்தைச் சார்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியையே தலித் சமுதாயத்திற்கு ஒதுக்கி இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

தலித் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான அம்பிகா சோனி, கே சி வேணுகோபால் உள்ளிட்டோர் டெல்லியில் ராகுல் காந்தியுடன் ஆலோசனை செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த மாநிலத்தில் இருக்கின்ற 32 சதவீத வாக்குகளை பெறுவதற்காக சிறுமணி அகாலி தளத்தின் வாக்குறுதியால் காங்கிரஸிடம் இருந்து கைநழுவி கொண்டிருந்த தலித்து வாக்குகளை திரும்பப் பெறுவதற்கான அடிப்படையில் தலித் முதலமைச்சரை காங்கிரஸ் கட்சி உறுதி செய்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் புதிய முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கின்றார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சராகி இருக்கும் சரண்ஜித்சிங் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பஞ்சாப் மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் தொடர்ச்சியாக நிறைவேற்ற வேண்டும் அவர்களுடைய நம்பிக்கை மிக முக்கியமானது என ராகுல் காந்தி குறிப்பிட்டு இருக்கிறார்.