எல்லாவற்றிற்கும் காரணம் பிரதமர் நரேந்திர மோடி தான்! மார்தட்டும் மத்திய அமைச்சர்!

0
55

இன்று இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் அந்த கட்சியின் தொண்டர்களால் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர் 20 வருட காலம் பிரதமர் மற்றும் முதலமைச்சராக இருந்து பொதுமக்களுக்கு சேவை புரிந்ததை போற்றும் விதத்தில் நேற்று முதல் அடுத்த இருபத்தி ஒரு நாட்களுக்கு அவருடைய பிறந்த நாள் விழாவை கொண்டாட தமிழக பாஜக திட்டமிட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் புகைப்பட கண்காட்சி ஒன்று சென்னை புரசைவாக்கத்தில் இருக்கின்ற தர்ம பிரகாஷ் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டு துவங்கி வைத்தார்கள். அதன்பின்னர் இதில் உரையாற்றிய முருகன் நாட்டின் பெண்கள் எல்லோருக்கும் ஜன்தன் திட்டத்தின் மூலமாக வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. அதில் அரசின் மானியங்கள் அவர்களுடைய வங்கி கணக்கிற்கு நேரடியாக செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 7 வருடங்களில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது என கூறியிருக்கிறார்.

வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை என்று அனைத்து துறைகளிலும் இந்தியா தற்சமயம் வளர்ச்சியடைந்த ஒரு நாடாக காட்சியளிப்பது அதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தான் காரணம் என்று தெரிவித்திருக்கிறார். 70 வருடங்களில் செய்ய வேண்டியதை பிரதமர் நரேந்திரமோடி ஏழு வருடங்களில் செய்து முடித்திருக்கிறார் எனவும், அவர் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அரசின் சாதனைகளை விலக்கும் இந்த புகைப்படங்களை மாணவர்கள் மிக ஆர்வமாக கண்டு செல்வது இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து இருப்பதை காட்டுகிறது. உயர வேண்டும் என்ற சிந்தனை இருக்கின்ற மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகள் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது இந்த புகைப்படத்தில் அவர் குஜராத்தில் இருந்து ஆரம்பித்த வாழ்க்கை முதல் அவர் பிரதமர் ஆக உயர்ந்தது வரையில் என எல்லாவிதமான புகைப்படமும் இடம் பெற்று இருக்கிறது என கூறியிருக்கிறார்.