அந்த இடத்தில் இதனை ஒரு சொட்டு வையுங்கள் இனி அரிப்பு எரிச்சல் பிரச்சனையே இருக்காது!!
நம் உடலிலுள்ள தேவையற்ற கழிவுகள் ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.இவை எந்த பிரச்சனையும் இன்றி சீராக நடந்தால் தான் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.ஒருவேளை மலக்குடலில் இருக்கின்ற கழிவுகள் ஆசனவாயில் வெளியேறாமல் தேங்கி விட்டால் அவை உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும்.
ஆரோக்கியமற்ற துரித உணவு,எளிதில் செரிமானமாகாத உணவுகளால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் மலக் குடலில் தேங்கிய கழிவுகள் வெளியேறும் பொழுது அவை ஆசனவாயில் புண்களை உண்டாக்குகிறது.
இந்த புண்களால் நாளடைவில் அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.எனவே ஆசனவாய் பகுதியில் ஏற்பட்டிருக்கும் புண்,அரிப்பு மற்றும் எரிச்சல் பாதிப்பு குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.
1)தேங்காய் எண்ணெய்
ஆசனவாய் பகுதியில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து வந்தால் அங்கு உருவாகி இருக்கும் புண்கள் விரைவில் குணமாகி விடும்.அது மட்டுமின்றி இவை மலத்தை தேக்கமால் எளிதில் வெளியேற்ற உதவுகிறது.
2)ஆலிவ் ஆயில் + தேன் மெழுகு
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் மெழுகு கலந்து ஆசனவாய் பகுதியில் அப்ளை செய்து வந்தால் அங்கு ஏற்பட்டிருக்கும் புண்கள்,அரிப்பு,எரிச்சல் பாதிப்பு குணமாகும்.
3)கற்றாழை ஜெல்
ஒரு தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல்லை ஆசனவாய் பகுதியில் அப்ளை செய்வதால் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள புண்கள் விரைவில் ஆறும்.
4)ஆலிவ் விதை பொடி
ஒரு தேக்கரண்டி ஆலிவ் விதை பொடியை ஒரு கிளாஸ் சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் ஆசனவாய் எரிச்சல்,அரிப்பு ஆகியவை குணமாகும்.