அப்படி போடு பள்ளி வேன்களில் சிசிடிவி கேமரா!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!
சென்னையில் பள்ளிவேன்களில் சிசிடிவி கேமரா மற்றும் சென்சான் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படும் பள்ளி வேன்கள் அனைத்திலும் சிசிடிவி கேமரா மற்றும் எச்சரிக்கை சென்சார் கருவி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டார்.எனவே பள்ளி வாகனங்களின் முன்பக்கமும் மற்றும் பின்பக்கமும் தலா ஒரு சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.
பின்புறம் எச்சரிக்கை சென்சார் கருவியை பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் பயணம் செய்யும் மாணவர்களை அந்தந்த பள்ளி நிர்வாகமே பேருந்தில் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்றுவிடுகின்றனர். அதேசமயம் உரிய பாதுகாப்புகள் இருந்தும் சில நேரங்களில் பள்ளி வாகனங்களில் அசம்பாவிதம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பள்ளி குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு பெற்றோர்கள் நம்மிடத்திலேயே விடுகின்றனர். பள்ளி வாகனங்களின் தரம் குறித்தும் மாவட்ட கல்வி அலுவலர்களும் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களும் இதனைப் பற்றி அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு தான் வருகின்றனர். பள்ளி வாகனங்களில் ஏற்படும் அசம்பாவிதம் குறித்து அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகள் மற்றும் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி ஆகியவை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிக் குழந்தைகள் பேருந்தில் பயணம் செய்வதற்கு ஏற்றவாறு அமைத்திருக்க வேண்டும். மேலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இத்தகைய நடவடிக்கையால் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க முடியும் என கூறியுள்ளார்.