அப்படி போடு கர்ப்பிணி பெண்களுக்கு மோடி அரசின் அசத்தல் திட்டம்!  விண்ணப்பித்து விட்டீர்களா? 

0
238
#image_title

அப்படி போடு கர்ப்பிணி பெண்களுக்கு மோடி அரசின் அசத்தல் திட்டம்!  விண்ணப்பித்து விட்டீர்களா? 

கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஒரு அசத்தலான திட்டத்தை கொண்டுவந்துள்ளது. 19 வயது நிரம்பிய அனைத்து கர்ப்பிணி பெண்களும் இந்த திட்டத்தில் பயன்  பெறலாம்.

ஏற்கனவே மாநில அரசு கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை அளித்து வருகிறது.  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவாக மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் மூலம் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் நிதி உதவி தொகையாக ரூபாய் 18000 வழங்கப்படும். இதன் மூலம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க முடியும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 தவணைகளாக இந்த 18000 வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் நான்காயிரம் ரூபாய் மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டகமும் வழங்கப்படுகிறது.  இந்த திட்டமானது முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டது.

தற்போது மாநில அரசை தொடர்ந்து மத்திய அரசும் கர்ப்பிணி பெண்களுக்காக நிதி உதவி திட்டத்தை தொடங்கியுள்ளது. கர்ப்பிணிகளுக்காக பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தை மோடி அரசாங்கம் தற்போது தொடங்கியுள்ளது. இதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய் 5000 முழுமையாக அரசு வழங்குகிறது.

இதன் மூலம் நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடின்றி பிறக்கவும் , எந்தவித நோய்களும் தாக்காமல் இருக்கவும் உதவி செய்யும் வகையில் இந்த பணம் வழங்கப் படுகிறது.  19 வயது நிரம்பிய கர்ப்பிணிகள் ஒவ்வொருவரும் ஆஃப்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பித்த பயனாளிகளுக்கு 3 தவணைகளாக இந்த பணமானது வழங்கப்படும். முதல் தவணையாக ரூ. 1000 , 2 – ஆம் தவணையாக ரூ.2000, 3 -ஆம் தவணையாக ரூ.2000 வழங்கப்படும். இந்த தொகை நேரிடையாக கர்ப்பிணிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும் இந்த திட்டம் தொடர்பான விபரங்களை தெரிந்துகொள்ள https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana எனும் இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.

 

 

Previous articleஅண்ணாமலை மீதான அவதூறு வழக்கு! நீதமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு!!
Next articleஅரிசி விற்பனையை நிறுத்திய மத்திய அரசு! தமிழக ரேஷனுக்கு பாதிப்பு..?