தமிழக அரசின் உடைய தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக தமிழக அரசு தொழில் முனைவோருக்கான பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் ஒவ்வொரு துறையிலும் துறை சார்ந்த வல்லுநர்கள் மூலமாக பலரை தொழில் முனைவோர் ஆக மாற்றி வெற்றி கண்டு வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது இலவசமாக youtube சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் youtube சேனலை பயன்படுத்தி பயனர்கள் தங்களுடைய தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான பயிற்சியை வழங்க இருக்கிறது. இந்த பயிற்சியில் சேர 18 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும் என்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் பெண் என இரு பயனாளிகளும் கலந்து கொள்ளலாம் என்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரக்கூடியவர்களுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி வசதிகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Youtube சேனல் உருவாக்கும் பயிற்சியானது ஏப்ரல் 22 முதல் 24ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் நடத்தப்படும் என்றும் இந்த பயிற்சியின் பொழுது youtube சேனலை எப்படி உருவாக்குவது? வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ எப்படி உருவாக்குவது ? சமூக ஊடக சந்தைப்படுத்துதல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் அதற்கான விதிகள் என அனைத்தையும் விரிவாக கற்றுத் தரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இது குறித்த மேலும் விவரங்களை அறிந்து கொள்ள www.editn.in என்ற தமிழக அரசின் உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் இணைய நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி மற்றும் கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
முகவரி :-
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை,
இ டி ஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை – 600032
கைபேசி எண் :-
✓ 8668108141
✓ 8668102600
✓ 7010143022