திருமண தடை நீங்க பிள்ளையாருக்கு இந்த விளக்கு போட்டு வழிபாடு செய்யவும்!!

Photo of author

By Divya

திருமண தடை நீங்க பிள்ளையாருக்கு இந்த விளக்கு போட்டு வழிபாடு செய்யவும்!!

வாழ்வில் ஆண்,பெண் அனைவருக்கும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.ஆனால் இன்று பலருக்கு திருமணம் எளிதில் கைகூடி வருவதில்லை.ஜாதகத்தில் தோஷம் இருப்பது,பொருத்தம் கூடி வராமல் இருத்தல் ஆகியவை தான் காரணம்.வயது காரணம் காட்டியும் திருமணத் தடை ஏற்படுகிறது.

இதனால் தங்களுக்கு திருமணம் நடைபெறுமா என்ற வருத்தத்தில் வாழ்க்கையே பலர் வெறுக்கின்றனர்.சிலர் பல வரன் பார்த்து சலித்து திருமணமே வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர்.

இந்த திருமண தடை நீங்கி திருமணம் நடக்க,விரும்பிய துணை கிடைக்க பிள்ளையாரை இப்படி வழிபாடு செய்யுங்கள்.

உங்கள் வீடிற்கு அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு வெள்ளி கிழமை நாளில் செல்லவும்.பிள்ளையாருக்கு அருகம்புல் மற்றும் துளசியால் கட்டப்பட்ட மாலையை அணிவிக்கவும்.பிறகு பிள்ளையாருக்கு முன் இரண்டு அகல் விளக்கு வைத்து நெய் ஊற்றி இரண்டு அகல் விளக்கிலும் இரட்டை திரி போட்டு தீபம் ஏற்றவும்.பிறகு நன்கு பழுத்த கீறல் படாத எலுமிச்சம் பழத்தை பிள்ளையாருக்கு முன் வைத்து திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.

திருமணம் நடைபெற்ற பின் பிள்ளையாருக்கு அருகம்புல் துளசி மாலையை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறேன் என்று வேண்டிக் கொள்ளவும்.இவ்வாறு செய்தால் விரைவில் திருமணம் கைகூடி வரும்.