பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி: பயணிகள் மகிழ்ச்சி
பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி உள்பட ஒருசில வசதிகளை ஆஸ்திரேலியாவின் தனியார் விமானம் ஒன்று பயணிகளுக்கு செய்து கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் வரை சுமார் 11,060 மைல்களுக்கு காண்டாஸ் என்ற விமானம் பயணம் செய்கிறது. இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் தொடர்ந்து 20 மணி நேரம் பயணம் செய்து சிட்னி நகரை அடைகிறது
எனவே இந்த நீண்ட பிரயாணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மனரீதியில் சோர்வு ஏற்படாமல் இருக்க நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள விமான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக விமானத்தின் ஒரு பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விமானத்தின் இருக்கையில் இருந்தபடியே ஒருசில எளிய உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது
இந்த புதிய உடற்பயிற்சி வசதிக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இதனையடுத்து இந்த விமான நிறுவனத்தில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதே திட்டத்தை உலகின் மற்ற விமான நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.