சஜித் பிரேமதாசா vs கோத்தபய ராஜபக்சே: இலங்கையின் அடுத்த அதிபர் யார்?

0
65

சஜித் பிரேமதாசா vs கோத்தபய ராஜபக்சே: இலங்கையின் அடுத்த அதிபர் யார்?

இலங்கையில் அதிபர் தேர்தல் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில் அங்கு அடுத்த அதிபர் யார்? என்பது விரைவில் தெரிந்துவிடும்

இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசா அவர்களுக்கும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையே தான் கடும் போட்டி உள்ளது. சஜித் பிரேமதாசா முன்னாள் அதிபரான மறைந்த ரணசிங்க பிரேமதாசாவின் மகன் ஆவார். அதேபோல் கோத்தபய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் ராணுவ அமைச்சரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மக்கள் கட்சி வேட்பாளரான அனுரா குமாரா திசநாயகவும் ஒரு முக்கிய வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் பிரிக்கும் ஓட்டுக்கள் தான் சஜித் பிரேமதாசா மற்றும் கோத்தபயா ஆகிய ஒருவரை அதிபராக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும் சஜித் பிரேமதாசா கடும் சவால் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் 1.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர் என்பதும் இந்த தேர்தலில் தமிழர்கள் வாக்குகள் மற்றும் புதிய வாக்காளர்களே அடுத்த அதிபரை தேர்வு செய்யும் ஒரு சக்தியாக இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது

author avatar
CineDesk