QR கோட் மூலம் பண மோசடி! சென்னையில் பயங்கரம்!

0
143
QR code fraud in chennai tea shop
QR code fraud in chennai tea shop

QR கோட் மூலம் பண மோசடி! சென்னையில் பயங்கரம்!

சென்னையில் நூதன முறையில் பண மோசடி ஒன்று நடந்துள்ளது.அந்த மோசடியானது QR கோட் மூலம் நடந்துள்ளது.சமீப காலமாக பொதுமக்கள் மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகமாக மேற்கொள்கின்றனர்.அந்த வகையில் அவர்கள் எளிதாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தி வந்தனர்.கடையில் பொருட்கள் வாங்கும்போதோ மற்றும் சேவைக் கட்டணம் செலுத்தும்போதோ இந்த முறையை பயன்படுத்தி பணத்தை செலுத்தி வருகிறார்கள்.

இதனிடையே இந்த முறையை பயன்படுத்தி மோசடியில் ஈடுப்பட்ட இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கந்தன்சாவடியில் துரை என்பவர் பல வருங்களாக டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அந்த பகுதிகளில் அதிகம் உள்ளதால் தனது கடைக்கும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று வந்தார்.

இந்நிலையில் சமீப காலமாக அவரின் டீக்கடை வருமானம் வெகுவாக குறைந்துள்ளது அவருக்கு தெரிய வந்தது.இதற்க்கு என்ன காரம் என்பதை யோசித்து வந்த அவர் தனது வங்கி கணக்கை சரிபார்த்தார்.அதில் பணம் மிகவும் குறைவாகவே இருந்துள்ளது.அதனால் அதிர்ச்சியடைந்த அவர் தன கடையில் இருக்கும் QR கோட் மூலம் தன வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார்.ஆனால் அவர் அனுப்பிய பணம் தன வங்கிக் கணக்கில் போய் சேரவில்லை.

மேலும் அவரது பணம் தான் அனுப்பிய கணக்கில் இருந்து குறைந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல்துறையிடம் இது குறித்து புகார் தெரிவித்தார்.இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் சிசிடிவி கேமராவை பார்த்தனர்.

அதில் இரண்டு நபர்கள் QR கோட் இருக்கும் இடத்தில் ஏதோ செய்துகொண்டிருந்தது தெரிய வந்தது.போலீசார் அந்த இரண்டு நபர்களையும் கைது செய்து விசாரித்து வந்ததில் கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் அதில் வல்லரசு என்ற நபர் போன்பே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக தெரிவித்தார்.

அதன்மூலம் இந்த QR கோட் மோசடியை நடத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.அந்த டீக்கடையின் QR கோட் மீது வேறு ஒரு QR கோட் ஒட்டி அவர்கள் தங்கள் கணக்கில் பணம் வருமாறு செய்துள்ளனர்.மேலும் பொலிசார் வேர் எங்காவது அவர்கள் மோசடி செய்துள்ளர்களா என்று விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இவ்வளவு உயிரிழப்புகளா!
Next articleஇவர்தான் பட்டத்து இளவரசரா? யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்!