மருந்து அட்டைகளில் “கியூ ஆர் கோடு” முறை!! அரசின் சூப்பரான அறிவிப்பு!!
நமது நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தான் பிறகு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இருப்பினும், மார்க்கெட்டில் தரமற்ற மற்றும் போலி மருந்து மாத்திரைகள் விற்கப்படுவதாக தினமும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக அனைத்து மருந்து மாத்திரைகளின் தரத்தை சரி பார்க்க மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முடிவை எடுத்துள்ளது.
அதாவது, தற்போது நாடு முழுவதும் அனைத்திலுமே கியூ ஆர் கோடு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில், இனிமேல் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் மற்றும் இதய நோய் போன்ற முன்னூறு வகையான நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகளின் அட்டைகளில் கியூ ஆர் கோடு அல்லது பார் கோடு அச்சிடப்பட முடிவு செய்துள்ளது.
இந்த கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலமாக மருந்தின் விவரங்கள், அதன் தயாரிப்பாளர் விவரம், உற்பத்தி குறித்த விவரங்கள், மருந்து காலாவதி ஆகும் தேதி உள்ளிட்ட ஏராளமான விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
இது நுகர்வோருக்கு பயனளிக்கும் விதமாக மருந்தின் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இந்த மருந்து அட்டைகளில் கியூ ஆர் கோடு முறையானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.