கணவன் இறந்த நான்கு நாட்களில் பணிக்கு திரும்பிய இங்கிலாந்து ராணி!

Photo of author

By Mithra

கணவன் இறந்த நான்கு நாட்களில் பணிக்கு திரும்பிய இங்கிலாந்து ராணி!

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த 9ஆம் தேதி தன்னுடைய 99வது வயதில் காலமானார்.  அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரவித்துள்ளனர்.

அதே நேரத்தில், கொரோனா பெருந்தொற்று காரணமாக யாராலும் நேரில் சென்று அரச குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இறுதிச் சடங்கு நிகழ்வானது, வெளி நாடுகளின் தலைவர்கள் இன்றி, இங்கிலாந்து அரசக் குடும்பத்தினரை மட்டுமே வைத்து நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 17ம் தேதி சனிக்கிழமை, பிலிப்பின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இதனை, நேரலையாக ஒலிபரப்பு செய்யவும், புகைப்படங்கள் எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கணவர் இறந்த 4 நாட்களில் ராஜாங்க பணிகளை மேற்கொள்ள, ராணி எலிசபெத் திரும்பியுள்ளார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த பணிகளுக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.