வினாத்தாள் வெளியான விவகாரம்! இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!!

0
197

வினாத்தாள் வெளியான விவகாரம்! இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!!

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து கடந்த 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு, கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்து கொரோனா பரவல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட முதல் திருப்புதல் தேர்வு கடந்த 9-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில் லீக் ஆனது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, 10 மற்றும் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள், முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 9ம் தேதி முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சில தேர்வுகளுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்பே சமூக வலைதளங்களில் வெளிவந்தது தொடர்பாக விரிவான விசாரணை செய்யப்பட்டது.

விசாரணையில், திருவண்ணமலை மற்றும் வந்தவாசியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் இருந்து வினாத்தாள் வெளியானது தெரியவந்தது. இதற்கு காரணமான பள்ளிகளைச் சேர்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி, திருப்புதல் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Previous article‘வாட்ஸ்அப்பில்’ இதை செய்தால் சிறைதண்டனை விதிப்பு!
Next articleஇலவச டிக்கெட்டை பெற்றுகொள்ள ஏற்பாடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here