புதுசு கண்ணா புதுசு…! இனி எல்லாமே புதுசு…!

0
61

ரூபாய் 861. 90 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படும் நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானப் பணி இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கும் என்று மக்களவை செயலாளர் தெரிவித்திருக்கின்றார்.

மத்திய அரசின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது இருந்து வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை போன்று ஒரு புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவத்தில் கட்டப்பட இருக்கின்றது மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது அதற்கு ஏற்றார்போல சுமார் 1400 பேர் வரை அமர்வதற்கான வசதியுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்படும்.

இந்தநிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ஆரம்பித்து 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன புதிய கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகளின் பொழுது காற்று மற்றும் ஒலி மாசுபாட்டின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் இது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனி அலுவலகங்களை கொண்டிருக்கும் கட்டிடம் எனவும் மக்களவை செயலாளர் தெரிவித்திருக்கின்றார்.

நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதற்காக கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது அதில் மக்களவை செயலகம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் கட்டுமான திட்டத்தின் கட்டிடக்கலைஞர் ஆகியோர் இடம் பெறுவார்கள் சென்றமாதம் டாட்டா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ரூபாய் 861 .90 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.