பேரவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஆர்.பி. உதயகுமார்!!

Photo of author

By Savitha

பேரவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஆர்.பி. உதயகுமார்!!

பத்து ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என கேள்வி கேட்ட வேளாண்மைத்துறை அமைச்சருக்கு அடுக்கான பதிலை வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேரவையில் இருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திருமங்கலத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் கல்லூரிகளில் 700 க்கும் மேற்பட்ட இடங்கள் ஏற்கனவே காலியிடமாக இருப்பதாக புதிய கல்லூரி அமைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என பதிலளித்தார்.

மேலும் பத்து ஆண்டுகளாக ஆர்.பி.உதயகுமார் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றியதையும் சுட்டிக்காட்டி பேசினார்.

தொடர்ந்து பேசிய ஆர்.பி. உதயகுமார், கேள்வி கேட்கும் போதெல்லாம் பத்து ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்புவது வழக்கமாக இருப்பதாகவும் பத்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.

மதுரை திருமங்கலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, புதிய பேருந்துநிலையம், துணைக்கோள் நகரம், புதிய கட்டடங்கள் என அதிமுக காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டதால் பேரவையில் இருந்த அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.