கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டு!! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு!!

0
186
#image_title

கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டு!! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு!!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன்,

இந்தியா முழுமைக்கும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து மாக் ட்ரில் நடத்த மத்திய அரசு தெரிவித்து இருந்தது. அதன் படி , இன்றும் நாளையும் அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் இந்த மாதிரி பயிற்சி நடக்கிறது. மற்ற மருத்துவ மனைகளில் மாவட்ட ஆட்சியர்கள் இந்த மாதிரி பயிற்சியை ஆய்வு செய்வார்கள் என்ற அவர்,

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு இந் ததிய அளவில் ஒரு நாள் பாதிப்பு 5000 திற்க்கும் மேல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 329 பேருக்கு பாதிப்பு உள்ளது.

பாதிப்பு உள்ளானவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை பெற்று மருந்து எடுத்துக் கொண்டு வீட்டில் தனிமை படுத்திக் கொண்டு இருக்கின்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்படுவது குறைவு தான்.

ஏற்கனவே, இரண்டாம் அலையில் டெல்டா , டெல்டா பிளஸ் பாதிப்பில் தீவிரமடைந்து உடனடியாக ஆக்சிஜன் தேவை இருந்தது. பின்னர் மூன்றாம் அலையில் பாதிப்பின் தீவிரம் குறைந்தது.அடுத்த அடுத்த அலைகளிலும் பாதிப்பு குறைவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றிய அரசு, மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் சொன்னதன் படி இன்றும் நாளையும் இந்த மாதிரி நிகழ்வு நடக்கும்.

படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசி, முக கவசங்கள் , தனி நபர் பாதுகாப்பு கவச உடை எவ்வளவு உள்ளது, ஆக்சிஜன் ஜெனரேட்டர், திரவ நிலை ஆக்சிஜன் கையிருப்பு ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

தற்போது, 64,281 படுக்கைகள் தயாராக 33,624 ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளன. 24,061 ஆக்சிஜன் கான்ஸ்ஸன் டிரேடர்ஸ், 130 ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள், 267 மெட்ரிக் டன் திரவ நிலை சேமிப்பு திறன் உள்ளன.

தனியார் மற்றும் அரசு சேர்ந்து 342 இடங்களில் ஆர் டி பி சி ஆர் சோதனை இடங்கள் உள்ளது. தேவை ஏற்ப 3 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்.

11 ஆயிரம் பேர் வரை ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்தகாலங்களில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ஆர் டி பி சி ஆர் சோதனை செய்யப்பட்டது. அப்போது ஒரே இடத்தில் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டது, தற்போது அந்த கிளஸ்டர் பாதிப்பு இல்லை தனி நபர் பாதிப்பு என்பதால் அறிகுறிகள் இருக்கும் போது மட்டும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்யப்படும்.

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 2000 பேருக்கு பரிசோதனை செய்யும் வசதியும், கொரனாவுக்கு படுக்கை வசதிகளும் உள்ளன.

தமிழக அரசு சார்பில் இன்புளுயன்சா காய்சசலுக்கு அமைக்கப்பட்ட முகாம்களை பொருத்தவரை 53,205 முகாம்கள் 11,159 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது இப்போது நலமுடன் உள்ளார்கள்.இன்புள யன்சா காய்ச்சல் தமிழகத்தில் முழுவதும் குறைந்து விட்டது.

5500 இன்புளுயன்சா தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு முன் கள பணியாளர்களுக்கு , மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கள பணியாளர்கள் தடுப்பூசி போடஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்ற அவர், கொரோனா பாதிப்பால் மட்டும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் வயது மூப்பு , நுரையீரல் தான் இறப்புக்கு காரணம் என்றார்.

author avatar
Savitha