நோய்த்தொற்று பரவல்! சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன குட் நியூஸ்!

0
107

தமிழகத்தில் சென்ற ஏப்ரல் மாதம் நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் இதன் காரணமாக, உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டது இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்றின் மூன்றாவது அலை அக்டோபர் மாதம் அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சில எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.தமிழகத்தைப் பொறுத்தவரையில் நோய்தொற்று பரவுவது கற்றுக்கொள் தான் இருக்கின்றது நேற்றைய தினம் 1604 பேருக்குத்தான் நடைபெற்றது கண்டறியப்பட்டு இருக்கிறது. 19 மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்திருக்கிறது. நோய் தொற்றிலிருந்து நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 263 பேர் குணமாகி வீடு திரும்பி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

34 மாவட்டங்களில் நூற்றுக்கும் வீடுதான் நோய் தொற்று பாதிப்பு இருக்கிறது. கோயம்புத்தூர், சென்னை, ஈரோடு, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 150க்குள் நோய்த் தொற்று பாதிப்பு இருக்கிறது.தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 87 லட்சத்து 97 ஆயிரத்து 950 பேர் நோய்த்தொற்று தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் அரசு மருத்துவமனைகளில் 2 கோடியே 68 லட்சத்து 30 ஆயிரத்து 662 பேருக்கும், தனியார் மருத்துவமனைகளில் 19 லட்சத்து 57 ஆயிரத்து 288 பேர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது.தற்சமயம் 12 லட்சத்து 26 ஆயிரத்து 511 தடுப்பூசிகள் கைவசம் இருக்கிறது தொடர்ச்சியாக தடுப்பூசிகள் வந்துகொண்டு இருப்பதன் காரணமாக, பல மாவட்டங்களுக்கு கூடுதலான தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறியிருக்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

முன்னரே நோய்த்தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் இடமும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இடமும், நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு இருக்கிறது என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தமிழக மக்களிடம் 66 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்திருக்கிறது சென்னையை பொருத்தவரையில் 80% மக்களுக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.விருதுநகர், ராமநாதபுரம், தேனி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஏற்கனவே நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் அங்கே நோய் எதிர்ப்பு சக்தி பொதுமக்களிடம் அதிகரித்து இருப்பதாக தெரியவந்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கின்ற திருப்பூர், ஈரோடு, கோயமுத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கின்றார்.

அதோடு குறிப்பிட்ட 10 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அந்த பகுதியிலும் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவு அதிகரித்து இருக்கிறது என்பதை கண்டறிவதற்காக சுகாதாரத் துறை பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.தமிழகத்தில் அடுத்த 6 மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க இலக்கு வைத்திருக்கின்றோம். அதுவரையில் நோய் கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இதில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று தெரிவித்து இருப்பதோடு நோய்த்தொற்று குறைந்த மாவட்டங்களிலும் பொது மக்கள் முக கவசம் அணிந்து செல்வது மிகவும் நல்லது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.