ரஜினியுடன் நடிகர் ராதாரவி திடீர் சந்திப்பு! ஒரு மணிநேரம் நடந்த ஆலோசனை!! வருங்கால அரசியல் அச்சாராமா..?
நடிகர் ராதாரவி தனது குடும்பத்தினருடன் திடீரென ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்தார்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் தயாராகி வரும் அண்ணாத்த படத்தின் முக்கிய காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளது. கடந்த 5 ஆம் தேதி சென்னையில் தனக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி ரசிகர் மன்ற அனைத்து மாவட்ட செயலாளர்களை அழைத்து அவசர கூட்டம் நடத்தினார்.
இதனையடுத்து, அவசரமாக நடத்திய பொதுக்கூட்டத்தில் தனக்கு திருப்தியில்லை என்றும், ஏமாற்றம் மிஞ்சியது என்றும் செய்தியாளர்களிடம் பேட்டியில் கூறினார். அதற்கு காரணம், ரஜினி ரசிகர் மன்றத்தில் புதிய உறுப்பினர்களை இணைக்க சொல்லி அனைவருக்கும் டார்கெட் கொடுக்கப்பட்டது. யாருமே அதிகளவு உறுப்பினர்களை சேர்க்கவில்லை என்பதால் ரஜினி ஏமாற்றம் அடைந்தார்.
இந்த சூழலில், அதிமுக வில் இருந்து பாஜக கட்சிக்கு தாவிய நடிகர் ராதாரவி திடீரென ரஜினிகாந்தை வீட்டில் சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக பார்க்கப்பட்டாலும், ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனை ரஜினியின் எதிர்கார அரசியல் பிரவேசத்தை பற்றியதாக இருக்கலாம் என்றும் ஒரு தகவல் கூறப்படுகிறது. பின்னர், ரஜினியுடன் சேர்ந்து ராதாரவி மற்றும் அவரது குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பல்வேறு நிலைப்பாடுகளில் பாஜகவிற்கு ஆதரவாக பேசிவரும் ரஜினி, துக்ளக் பொன்விழா சர்ச்சை, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இஸ்லாமிய மத குருமார்களுடன் சந்திப்பு, புதிய அரசியல் கட்சி தொடங்கி தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்புவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.