திருநங்கைகளுக்கு வீடு கட்ட உதவிய அக்க்ஷய்குமார்! ராகவா லாரன்ஸிடம் 1.5 கோடி நிதியுதவி வழங்கினார்!

திருநங்கைகளுக்கு வீடு கட்ட உதவிய அக்க்ஷய்குமார்! ராகவா லாரன்ஸிடம் 1.5 கோடி நிதியுதவி வழங்கினார்!

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் அக்‌ஷய்குமார் திருநங்கைகளுக்காக சொந்தமாக வீடுகளை கட்டித் தருவதற்கு 1.5 கோடி பணத்தை இயக்குனர் ராகவா லாரன்ஸ்சிடம் வழங்கினார்.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான டான்ஸ்களை அறிமுகப்படுத்தியவரும், காஞ்சனா, முனி போன்ற திகில் படங்களை இயக்கிய டைரக்கடர், நடிகர், தயாரிப்பாளர், சமூக சேவகர் போன்ற பன்முகமாக இருக்கும் ராகவா லாரன்ஸ்சிடம் திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்காக ஒன்றரை கோடி பணத்தை பாலிவுட் நடிகர் அக்க்ஷய்குமார் வழங்கியுள்ளார்.

பல்வேறு குழந்தைகள், முதியோர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு வகையில் ராகவா லாரன்ஸ் தனது டிரஸ்ட் மூலம் சமூக சேவைகளை செய்து வருகிறார். குறிப்பாக இதய அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ உதவிகளை நேரடியாக பண உதவிகளை செய்து பலரது உயிரை காப்பாற்றியுள்ளார். இவரது சேவையில் அடுத்தகட்டமாக திருநங்கைகளுக்கு வீடுகட்ட நிதியுதவி பெற்றுள்ளார்.

தன்னுடையே டிரஸ்ட்டின் 15 வது தொடக்க ஆண்டினை முன்னிட்டு ஆதரவற்ற திருநங்கைகளுக்கான வீடுகட்ட தொடங்கவுள்ளார். சமுதாயத்தில் பலரால் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளின் வாழ்க்கையிலும், மனதிலும் ராகவா லாரன்ஸ் தனி இடம் பிடித்துவிட்டார்.

Leave a Comment