பேருந்தில் சீட் கிடைக்காததால் ஆத்திரம்! கண்டக்டரை கடித்து வைத்த வாலிபர்!

Photo of author

By Sakthi

பேருந்தில் சீட் கிடைக்காததால் ஆத்திரம்! கண்டக்டரை கடித்து வைத்த வாலிபர்!

பேருந்தில் உட்காருவதற்கு இருக்கை கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஒருவர் பேருந்தின் நடத்துனரை கண்ணத்தில் கடித்து வைத்த சம்பவம் பேருந்தில் பயணித்த சக பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

தெலங்கானா மாநிலத்தின் அடி சுந்தரவாடா என்ற பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று உட்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தில் கான் என்ற நடத்துனர் அதாவது கண்டக்டர் பணியில் இருந்தார்.

அரசு பேருந்து அன்ஸ்னாபூரின் நிறுத்தத்தில் நின்றது. அப்பொழுது அந்த ஊரை சேர்ந்த அசிம் கான் என்பவர் பேருந்தில் ஏறினார். மேலும் நடத்துனர் கான் அவர்களிடம் இருந்து டிக்கெட்டையும் பெற்றுக் கொண்டார்.

மேலும் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் அசிம் கான் அவர்களுக்கு உட்காருவதற்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அசாம் கான் அவர்கள் பணியில் இருந்த கண்டக்டர் கான் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

மேலும் டிக்கெட்க்கு வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு தகராறு செய்ததால் கண்டக்டர் கான் டிக்கெட்டுக்கான பணத்தை அசிம் கான் அவர்களிடம் திருப்பி கொடுத்துவிட்டு அவரை பேருந்தில் இருந்து இறக்கி விட்டார். இதில் மேலும் ஆத்திரம் அடைந்த அசிம் கான் கண்டக்டர் கான் அவர்களை தாக்கி அவருடைய கண்ணத்தை கடித்தார்.

இதில் கண்டக்டர் கான் அவர்களுக்கு கண்ணத்தில் இரத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த பேருந்தில் இருந்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கண்டக்டரை தாக்கி இரத்த காயம் ஏற்படுத்தியதால் மற்ற பயணிகள் அசிம் கான் அவர்களை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து காவல் துறையினர் அசிம் கான் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சீட் கிடைக்காததால் கண்டக்டர் கிண்ணத்தை கடித்து இரத்தம் வரவழைத்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.