சென்னை டூ தூத்துக்குடி! மீண்டும் தொடங்கிய இரயில் சேவை!

0
187
#image_title

சென்னை டூ தூத்துக்குடி! மீண்டும் தொடங்கிய இரயில் சேவை!

தென்மாவட்டங்களில் பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை முதல் தூத்துக்குடி இடையிலான இரயில் சேவை இன்று(டிசம்பர்22) மீண்டும் தொடங்கி இருக்கின்றது.

சமீபத்தில் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, நெல்லை, தூத்துக்குடி பான்ற மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. சாலைகள், வீடுகள் அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதே போல இரயில் தண்டவாளங்கள் பலவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இந்த பகுதிகளுக்கு செல்லும் இரயில் சேவை நிறுத்தப்பட்டது.

தற்பொழுது மழை வெள்ளம் வடிந்து வரும் நிலையில் சேதம் அடைந்த இரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகளை தென்னக இரயில்வே செய்து வருகின்றது. சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்க மணல் மூட்டைகள், ஜல்லி கற்கள் தேவைப்படுவதால் மானாமதுரையால் சேமித்து வைத்துள்ள மணலை சாக்கு பைகளில் நிரப்பும் பணியை தென்னக இரயில்வே மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை தூத்துக்குடி இரயில் சேவை நான்கு நாட்களுக்கு பிறகு இன்று(டிசம்பர்22) மீண்டும் தொடங்கியுள்ளது.

நேற்று அதாவது டிசம்பர் 21ம் தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட முத்துநகர் விரைவு இரயில் இன்று(டிசம்பர்22) காலை 6.15 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தை வந்து சேர்ந்தது. சென்னை முதல் தூத்துக்குடி வரை மீண்டும் இரயில் சேவை தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நிலைமை சீரானதும் மீண்டும் பழையபடி தூத்துக்குடியில் இரயில்கள் இயங்கும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.