நீண்ட நாளுக்குப் பிறகு ஆக்சன் படத்தில் நடித்திருக்கும் லாரன்ஸ்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
244
Raghava lawrence film ready to release in theatres
Raghava lawrence film ready to release in theatres

நீண்ட நாளுக்குப் பிறகு ஆக்சன் படத்தில் நடித்திருக்கும் லாரன்ஸ்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகம் ஆனவர்.இவரின் நடனம் தனித்துவம் வாய்ந்தது.தமிழில் முன்னணி நடிகர்கள் அனைவருக்குமே இவர் நடன இயக்குனராக இருந்துள்ளார்.பல்வேறு விருதுகளையும் இவர் நடனத்திற்காக பெற்றுள்ளார்.இவர் திரைப்படத்திலும் நடிக்க ஆரம்பித்தார்.நடிகர் அஜித்குமார் நடிப்பில் வேய்வந்த அமர்க்களம் படத்தில் இவர் கவுரவ வேடத்தில் நடித்திருப்பார்.மேலும் ஒரு பாடலுக்கு இவர் நடனமும் ஆடியிருப்பார்.

இவர் ஸ்பீடு டான்சர் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.இது தெலுங்கு மொழி திரைப்படம் ஆகும்.மேலும் 2002ம் ஆண்டு தமிழில் இவர் அற்புதம் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.இந்த படத்தை ஆர்.எஸ்.வெங்கடேஷ் இயக்கினார்.ஆர்.பி.சௌத்ரி இந்த படத்தை தயாரித்தார்.இந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை.அதற்கடுத்து நடித்த ஸ்டைல் படமும் வெற்றி பெறவில்லை.

2007ம் ஆண்டு இவர் நடித்த முனி திரைப்படம் பேய் படமாக வெளி வந்தது.இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடத்திருப்பார்.இந்தத் திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியும் இருப்பார்.இவர் இயக்கிய முதல் திரைப்படமும் இதுவே.இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.இந்த திரைப்படம் தான் இவருக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது.ஜெமினி ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்தது.

அதன் பின்னர் இவர் பாண்டி,ராஜாதி ராஜா,இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களில் நடித்தார்.இந்தத் திரைப்படங்கள் ரசிகர்களிடையே ஓரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றன.அடுத்து இவர் நடித்த காஞ்சனா திரைப்படம் முனி படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்தது.இந்த படத்தையும் ராகவா லாரான்சே இயக்கியிருப்பார்.இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.நல்ல வசூலையும் பெற்றது.இதனைத் தொடர்ந்து இவர் இந்த படத்தின் அடுத்த பாகங்களை எடுத்துக் கொண்டு உள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் நடித்து முடித்திருக்கும் படமான ருத்ரன் திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது.கதிரேசன் இந்த படத்தை இயக்குகிறார்.ப்ரியபவானிசங்கர் நாயகியாக நடிக்கிறார்.இந்த படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.அடுத்த வருடம் தமிழ் புத்தாண்தான ஏப்ரல் 14 அன்று இந்த படம் வெளியாகவுள்ளது.

Previous articleவாகனம் புதிதாக வாங்கும் போது இதையெல்லாம் பாருங்கள்! இதிலும் கவனமாயிருங்கள்! ஆணை பிறப்பித்த ஹை கோர்ட் !
Next articleவருமான வரி செலுத்தாத விவகாரம்! சசிகலாவிற்கு எதிராக உறுதியாக நிற்கும் வருமான வரித்துறை!