மீண்டும் பழைய பாடலை ரீமேக் செய்யும் ராகவா லாரன்ஸ்.!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் ஒரு பழைய பாடலை ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகரான ராகவா லாரன்ஸ் இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் காஞ்சனா 3.

இதையடுத்து, தற்போது இவர் ருத்ரன், துர்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த படத்தை ஆடுகளம் பொல்லாதவன் போன்ற திரைப்படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் கடந்த 1962ம் ஆண்டு வெளியான வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய் என்ற பாடலை ரீமிக்ஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment