கும்ப ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0
103

கும்ப ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

நிதானமாக செயல்பட்டு காரியத்தை சாதிக்கும் திறமை கொண்ட கும்ப ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கும்ப ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானம் என்னும் மூன்றாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் பாக்கிய ஸ்தானம் என்னும் ஒன்பதாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார்.

மேலும் ராகு கேது பெயர்ச்சியின் பலன்கள் : புதிய முயற்சிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொண்டு வெற்றி வாகை சூடுவீர்கள். சவாலான காரியங்களையும் திறமையுடன் செயல்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கான தருணங்கள் ஏற்படும். மேலும் அண்டை அயலார் வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது.

ராகு கேது பெயர்ச்சியில் பொருளாதாரம் நிலை:தனம் சார்ந்த நெருக்கடிகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மேலும் வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சேமிப்பு மற்றும் காப்பீடு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குடும்ப நபர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.

ராகு கேது பெயர்ச்சிதயில் உடல் மற்றும் ஆரோக்கியம் :உடல்நிலையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் விரைவில் குணமடைந்து விடுவீர்கள். காப்பீடு தொடர்பான விஷயங்களில் புரிதலும், உதவியும் கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி பெண்களுக்கு :தம்பதியர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகளை உருவாக்கி கொண்டு இருந்தவர்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கணினி மற்றும் எதிர்காலம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகளும், பொறுப்புகளும் அதிகரிக்கும்.

ராகு கேது பெயர்ச்சி மாணவர்களுக்கு :உடனிருப்பவர்களின் பேச்சுக்களில் மயங்காமல் சிந்தித்து செயல்படவும். நவீன பொருட்களின் மூலம் சில விரயங்கள் உண்டாகும். வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் தகுதிக்கேற்ப வாய்ப்புகள் ஏற்படும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் குறையும். வெளிவட்டாரத் தொடர்புகளில் விழிப்புணர்வு வேண்டும்.

ராகு கேது பெயர்ச்சியினால் ஏற்படும் நன்மைகள் :ராகு கேது பெயர்ச்சியின் மூலம் புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல்களும், குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களையும் நிறைவேற்றி வைப்பீர்கள்.

ராகுகேது பெயர்ச்சியில்கவனம் தேவை :தந்தைவழி உறவினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

வழிபாடு முறை:சனிக்கிழமைதோறும் வராஹி அம்மனை வழிபாடு செய்துவர செய்கின்ற முயற்சிகளில் உதவியும், சாதகமான சூழ்நிலைகளும் உண்டாகும்.

author avatar
Parthipan K