மீன ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

0
115

மீன ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் மாட்டாமல் மீண்டெழும் மீன ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மீன ராசிக்கு குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் மீன ராசிக்கு அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் : பேச்சுக்களில் நிதானமும், பொறுமையும் வேண்டும். விளையாட்டாக பேசும் பேச்சுக்கள் வினையாக மாறும். மனதில் இனம் புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பங்களும், தடுமாற்றங்களும் உண்டாகும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

பழக்கவழக்கம் தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். புதிய மொழிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர் மற்றும் சகோதரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பாராத அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ராகு கேது பெயர்ச்சி பொருளாதார நிலை :குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பிற மொழி பேசும் மக்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விலையுயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

ராகு கேது பெயர்ச்சியினால் உடல் மற்றும் ஆரோக்கியம் :உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் மாற்றங்கள் காணப்படும். உடல் உஷ்ணம் தொடர்பான உணவுகளை குறைத்து கொள்ளவும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.

ராகு கேது பெயர்ச்சி பெண்களுக்கு :பெண்களுக்கு சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். அவ்வப்போது உங்களின் மீதான வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடனிருப்பவர்களை பற்றி கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். வாழ்க்கை துணை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்காலம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும்.

ராகு கேது பெயர்ச்சி மாணவர்களுக்கு :மாணவர்கள் விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. கதை மற்றும் கவிதை சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள். வித்தியாசமான கற்பனைகளும், திறமைக்கு உண்டான அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களுடனான விஷயங்களில் கவனம் வேண்டும்.

ராகு கேது பெயர்ச்சியினால் ஏற்படும் நன்மைகள் :ராகு கேது பெயர்ச்சியின் மூலம் வித்தியாசமான மற்றும் விலையுயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சி கவனம் தேவை:எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

ராகு கேது பெயர்ச்சி வழிபாடு முறை :

செவ்வாய்க்கிழமைதோறும் எல்லை தெய்வங்களை வழிபாடு செய்துவர குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும்.

author avatar
Parthipan K