ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0
196

 

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

எந்த வேளையிலும் மகிழ்ச்சியுடனும், புன்சிரிப்புடனும் காணப்படும் ரிஷப ராசி அன்பர்களே. உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் ரிஷப ராசிக்கு விரய ஸ்தானம் என்னும் பனிரெண்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சத்ரு ஸ்தானம் என்னும் ஆறாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார்.

 

ராகு கேது பெயர்ச்சியின் பலன்கள் :

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். மனதில் இருந்துவந்த தாழ்வுமனப்பான்மை சிந்தனைகள் குறைந்து, எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கேளிக்கை தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் காணப்படும். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும்.

நிலுவையில் இருந்துவந்த தனவரவு கிடைக்கும். தமக்கு எதிராக செயல்பட்டவர்களின் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். முன்கோபத்தை குறைத்து கொண்டு பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். வாகன பயணங்களில் நிதானம் அவசியமாகும்.

ராகு கேது பெயர்ச்சியினால் பொருளாதாரம் :

பணவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவி இடையே தேவையற்ற விவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது. மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.

உடல் மற்றும் ஆரோக்கியம் : உடல் மற்றும் ஆரோக்கியத்தில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கடந்த கால நினைவுகளின் மூலம் மன அழுத்தங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். நீண்ட கால ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.ரகு கேது பெயர்ச்சி பெண்களுக்கு :சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தம்பதியர்களுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புத்திரர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ராகு கேது பெயர்ச்சி உத்தியோகஸ்தர்களுக்கு :உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் படிப்படியாக குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்திருந்த இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மற்றவரை சார்ந்து இல்லாமல் நீங்களே முடிவு எடுப்பது முன்னேற்றத்தை உருவாக்கும். தமக்கு எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

 

ராகு கேது பெயர்ச்சி மாணவர்களுக்கு :கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். நண்பர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும்.

ராகு கேது பெயர்ச்சி நன்மைகள் :ராகு கேது பெயர்ச்சியின் மூலம் மனதளவில் ஏற்பட்டிருந்த சில குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சியில் கவனம் தேவை :உத்தியோகம் சார்ந்த பணிகளிலும், செயல்பாடுகளிலும் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.

ராகு கேது பெயர்ச்சிக்கு வழிபாடு முறை :வெள்ளிக்கிழமைதோறும் குலதெய்வ வழிபாட்டை செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

 

Previous articleஇதை மட்டும் வீட்டில் வெக்கவே கூடாது!!அப்படி இருந்தால் உடனே அகற்றுங்கள்!
Next articleசூப்பர் ! இவளோ நாள் தெரியாம போச்சே!!இதை பற்றி உங்களுக்கு தெரியுமா ??