மத்திய மந்திரி பேசத் தொடங்கும் போது பறக்கும் முத்தத்தை தெறிக்க விட்ட ராகுல் காந்தி!! அதிர்ச்சியில் பார்லிமென்ட்!!
மக்களவையில் மத்திய மந்திரி நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக பேச தொடங்கும் பொழுது ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக பரபரப்பு எழுந்துள்ளது.
இதனால் ராகுல் காந்தியின் செயலை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவையில் நேற்று புதன்கிழமை நம்பிக்கை இல்லா விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அனல் பறக்கும் பேச்சுக்கு எதிராக தனது பேச்சை தொடங்கும் பொழுது ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்தார் என செய்தி பரவியது.
ராகுல் காந்தியின் இந்த அநாகரீகமான நடவடிக்கைக்கு பாஜக பெண் மந்திரிகள் மற்றும் எம்பிக்கள் விரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஸ்மிருதி இராணியின் பேச்சு முடிந்து அவர் பார்லிமென்டை விட்டு வெளியேறும் பொழுது ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்தது தொடர்பாக மக்களவை சபாநாயகரிடம் புகார் அளிக்க பாஜக கமிட்டியால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் இந்த அநாகரிக செயல் குறித்து ஸ்மிருதிராணி பேசும் போது,
” நான் ஒன்றை ஆட்சேபனை செய்கிறேன். எனக்கு முன்னால் பேசிய எதிர்கட்சியை சேர்ந்தவர் அநாகரீகமாக நடந்து கொண்டார். ஏராளமான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து இருக்கும் போது இவ்வாறு நாடாளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுப்பது பெண் மீது வெறுப்பு கொண்ட நபரால் மட்டுமே முடியும். இதுபோன்ற கண்ணியமற்ற நடத்தை இதற்கு முன் இங்கே இருந்ததில்லை. ஆனால் இப்போதுதான் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக பார்க்கிறேன் என அவர் கூறினார்.