வயநாடு எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் மக்களவை செயலாளர் அறிவிப்பு !!

Photo of author

By Rupa

வயநாடு எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் மக்களவை செயலாளர் அறிவிப்பு !!

இந்திய அரசியல் வரலாற்றில் முக்கிய அரசியல் கட்சிகள் வரிசையில் முதல் இடம் என்றால் அது காங்கிரஸ் கட்சிக்கு தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, காங்கிரஸ் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி,மற்றும் ராகுல் காந்தி, இவர்கள் வரிசையில் தற்போது பிரியங்கா காந்தியும் இணைந்துள்ளார்.

ராஜீவ் காந்தி மறைவுக்கு பின் சரியான தலைமை இல்லாத காரணத்தால் கட்சியை வலுப்படுத்த சோனியா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார், ஆனால் அவரது தலைமையை விரும்பாத கட்சியினர் ராகுல் காந்தியை தலைவர் பொறுப்பை ஏற்க வைத்தனர்.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின் பல்வேறு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது, இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்தார் அதில் குறிப்பாக பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட மோடியை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

ராகுல் காந்தி மோடியை கடுமையாக பேசிய பேச்சு தான் தற்போது அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்துவிட்டது, இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, இந்த தீர்ப்பை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.

ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பினால் அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விட்டதாக நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே அவருக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது, இதில் 10,000 பிணை தொகையாகவும் மூன்று மாதத்திற்கு தண்டனையை நிறுத்தி வைக்கவும் சூரத் செசன்சு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராகுல் காந்தி பதவி இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது,