இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா தொடரை முடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றது.
அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி. மேலும் இந்த தொடரில் முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா கலந்து கொள்ளவில்லை அதனால் பும்ரா அணியின் கேப்டனாக வழிநடத்தினார். பின் ரோஹித் தொடர்ந்தார். ஆனால் அவர் சரியான பேட்டிங் மற்றும் கேப்டன்சி செய்யாத காரணத்தால் அவர் 5 வது போட்டியில் விலகினார். பும்ரா கேப்டன் சி செய்தார் ஆனால் காயம் காரணமாக முதல் இன்னிங்ஸில் குறைந்த ஓவர் மட்டும் வீசி வெளியேறினார்.
இந்நிலையில் அவரை நிரந்தர டெஸ்ட் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று குரல் எழுந்து வருகிறது. எனினும் தற்போது இந்த கேப்டன் ரேஸில் கே எல் ராகுல் இணைந்துள்ளார். இந்த முறை ஒரு சில ஆட்டங்களில் தவற விட்டாலும் இந்த தொடரில் கே எல் ராகுல் சிறப்பாக விளையாடினார். மேலும் அவர் ஐ பி எல் ல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். எனவே அவரை டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கலாம் என குரல்கள் எழுந்து வருகிறது. மேலும் பும்ரா ஒரு வேலை காயம் காரணமாக வெளியேறினால் வருட கணக்கில் அணிக்கு திரும்புவதில்லை என கூறி வருகின்றனர்.