ராகுல் – பிரியங்காவுக்கு அனுமதி மறுப்பு ???

Photo of author

By Parthipan K

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக உத்தப்பிரதேசத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் போராட்டக்காரர்கள் 17 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் மீரட் புறப்பட்டுச் சென்றனர்.

மீரட்டிற்கு வெளியே பர்தாபூர் காவல் நிலையம் அருகே போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். உத்தரப் பிரதேசத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலையில் அவர்களை அனுமதிக்க மறுத்து விட்டனர்.

இது குறித்து ராகுல் கூறுகையில் “மீரட் நகருக்குள் நுழைய எங்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அதற்கான ஆணையை காட்டுமாறு கேட்டோம். போலீசாரிடம் பதில் இல்லை,அவர்கள் எங்களை திருப்பி அனுப்பினர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.