மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணிக்கு ரூ.3941 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

0
80

நிதி ஒதுக்கீடு செய்வது, முக்கியமான திட்டங்கள் மற்றும் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்த முடிவுகளை எடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நேற்று கூடியது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021,ல் நடக்கவுள்ளது. இதற்கு முன்பாகவே தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான பணிகள் துவங்கிவிடும். அசாமை தவிர மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பணிகள் நடக்கவுள்ளது.

இதன்படி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்களை பற்றிய தகவல்களை, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.இந்த திட்டத்தின் கீழ் மக்கள் தொகை பற்றிய விபரங்களுடன் “பயோமெட்ரிக் “விபரங்களும் இடம் பெரும்.

இந்த பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகளுக்காக 3,941 கோடி ருபாய் நிதி ஒதுக்க நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் வரும் ஏப்ரலில் துவங்கவுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் எடுக்கப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்து தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை செயல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது அரசிடம் இல்லை என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

author avatar
Parthipan K