அடுத்த ரெய்டு! அதிமுக அதிர்ச்சி!

Photo of author

By Parthipan K

அடுத்த ரெய்டு! அதிமுக அதிர்ச்சி!

சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர்கள் வீட்டில் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.அதிகாலை ஆரம்பித்து மாலை வரை இந்த சோதனை நடைபெற்றது.இந்த சோதனையில் பல முறைகேடுகளில் எஸ்பி வேலுமணி ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர்.மேலும் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றினர்.இந்த சோதனையானது அதிமுக கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த இன்னொரு முக்கிய நிர்வாகியான வெற்றிவேல் என்பவரின் வீட்டில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர்.சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள வெற்றிவேல் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.சுமார் ஐந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.முன்னாலள் அமைச்சர் எஸ்பி வேலுமணி செய்த முறைகேடுகளில் இவரும் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

வெற்றிவேல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியிடம் உதவியாளராக இருந்தார்.சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்த சோதனையானது நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று காலை 6.30 மணி வரை நடைபெற்றுள்ளது.வெற்றிவேல் ஒப்பந்ததாரராகவும் இருந்துள்ளார்.

இந்த சோதனையானது அதிமுக கட்சியின் தரப்பில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பல வழிகளில் முறைகேடுகள் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.இப்போது அந்த முறைகேட்டில் தொடர்புடைய வெற்றிவேல் என்பவரும் இதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக தெரிகிறது.வெற்றிவேல் அதிமுக நிர்வாகியாகவும் இருக்கிறார் மேலும் ஒப்பந்ததாரராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.