அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கிய சிறப்பு நீதிமன்றம்!

0
68

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக சென்ற ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற ஒப்புதலை வாங்குமாறு தமிழக அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுரை வழங்கி இருக்கிறது.

சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாகவும், மக்களின் மனநிலையை தொடர்பாகவும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் தொடர்பாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக இருவரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் விதத்தில் செயல்படுவதாக தெரிவித்து அவர்கள் சார்பாக கடந்த பிப்ரவரி மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்ந்தது.

இந்த இரண்டாவது ஒரு வழக்குகளிலும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக தனியாக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் நேற்றைய தினம் நீதிபதி சிவகுமார் முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் இந்த வழக்கு உட்பட 130 அவதூறு வழக்குகளை திரும்ப பெற முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகளும் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு முன்பு உயர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்று சென்ற ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த வழக்கை வாபஸ் பெறுவது குறித்து உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்று விட்டு அதன் பிறகு வாருங்கள் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தமிழக அரசியல் தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்ற ஜூலை மாதம் 30ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.