20,000 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றம் : அது உருவான சுவாரஸ்ய பின்னணி!

Photo of author

By Parthipan K

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த நோய்த் தொற்று வேகமாக பரவும் அபாயம் உள்ளதால் மருத்துவ துறையினரும் துப்புரவு தொழிலாளர்களும் தீவிர களப்பணியில் இறங்கினர். இதனால் மருத்துவர்கள் சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களை பரிசோதனை செய்வதிலும் துப்புரவு தொழிலாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையில் நோய்த்தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் தயார் செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று அதிகமானால் நோயாளிகளை கண்காணிப்பில் வைக்க நிறைய வார்டுகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றம் செய்திருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரயில்கள் இயங்காமல் இருந்ததாலும் அவற்றின் உள் கைட்டமைப்பும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றம் செய்ய ஏதுவாக இருந்ததாலும் இது எளிதில் சாத்தியமானது

இவ்வாறு ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றம் செய்யும் யோசனையை வழங்கியது டுவிட்டரில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை பின்தொடர்பவர்கள் தான். ரயில்வே அமைச்சர் அடிக்கடி டுவிட்டரில் போட்டு வந்த பதிவு போடும்போது சில நெட்டிசன்கள் வழங்கிய இந்த வித்தியாசமான ஐடியா இன்று செயல்வடிவம் ஆகியுள்ளது.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாறியுள்ள 20,000 பெட்டிகள் மூலம் 3.2லட்சம் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று தனது இன்றைய பதிவில் அமைச்சர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிடப்பட்ட பதிவுகளும் பின்னூட்டங்களும் இதற்கு சான்றாக விளங்குகின்றன.

https://twitter.com/PiyushGoyal/status/1244891970306101248?s=19