ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றிய ரயில்வேதுறை : அமைச்சர் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களால் குவியும் பாராட்டுக்கள்!

0
191

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த நோய்த் தொற்று வேகமாக பரவும் அபாயம் உள்ளதால் மருத்துவ துறையினரும் துப்புரவு தொழிலாளர்களும் தீவிர களப்பணியில் இறங்கினர். இதனால் மருத்துவர்கள் சளி காய்ச்சல் உள்ள நபர்களை பரிசோதனை செய்வதிலும் துப்புரவு தொழிலாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையில் நோய்த்தொற்று ஏற்பட்ட நபர்களை குணப்படுத்த நாடு முழுவதும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் தயார் செய்யப்பட்டன. ஒருவேளை வைரஸ் தொற்று அதிகம் ஆனால் நோயாளிகளை கண்காணிப்பில் வைக்க நிறைய வார்டுகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றம் செய்திருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரயில்கள் இயங்காத நிலையில் அவை தனிமைப்படுத்தப்பட்ட காடுகளாக மாற்ற ஏதுவாக மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இதனை பார்த்த மக்கள் ஒருமனதாக பாராட்டி வருகின்றனர்.

Previous articleகமலஹாசன் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன?
Next articleகேரளாவில் முதல் பலி! தொடர்ந்து வரும் கொரோனாவின் கோரதாண்டவம்! முடிவு எப்போது.?