அரசு ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!!

Photo of author

By Vijay

ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகை காலங்களில் போனஸ் வழங்குவது வழக்கம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறைகளில் ஒன்றான ரயில்வேதுறை ஊழியர்களுக்கான போனஸ் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

அதன்படி, இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனசாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11 56 லட்சம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன் பெறுவர் என்று தெரிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். மேலும், அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.