ரயில் டிக்கெட் கேன்சல் செய்தல் மற்றும் அதற்கான பணம் பிடித்தல் விதிமுறைகள்!! இந்தியன் ரயில்வேஸ்!!

Photo of author

By Gayathri

இந்தியன் ரயில்வேஸில் ட்ரெயின் டிக்கெட் கேன்சல் செய்தல் மற்றும் கேன்சல் செய்யும் பொழுது பிடிக்கப்படும் தொகை குறித்து உள்ள விதிகளை இந்த பதிவில் காண்போம்.

ரயில் சேவையை பொறுத்தவரை ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய பொது துறையாக உள்ளது. இதுவே பண்டிகை காலங்களில் சாதாரண நாட்களை விட பன்மடங்கு கூட்டமானது அதிகரிக்கிறது. இது போன்ற சமயங்களில் பெரும்பான்மையினருக்கு வெயிட்டிங் லிஸ்ட் தான் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கன்பார்ம் ஆகாது என்னும் வேளையில் நாம் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை கேன்சல் செய்கிறோம். RTI பதிலின்படி, இந்திய ரயில்வே கடந்த மூன்று ஆண்டுகளில் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் மூலம் மட்டும் ரூ.1,230 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்பது தெரியவருகிறது.

இந்திய ரயில்வேயின் படி டிக்கெட்டை ரத்து செய்வதற்கான விதிமுறைகள் :-

✓ டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 4 மணி நேரத்திற்கு முன்பே தங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும். இந்த காலக்கெடுவிற்குள் டிக்கெட்டை ரத்து செய்யாவிட்டால், பணம் திரும்ப வழங்கப்படாது.

✓ உங்கள் ரயில் டிக்கெட் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகும் காத்திருப்புப் பட்டியலில் இருந்தால் ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் உங்கள் டிக்கெட் ஆட்டோமெட்டிகாக ரத்து செய்யப்படும்

✓ மேலும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பயணிகளுக்கு ரூ.60 கழிக்கப்படும். அதேசமயம் ஏசி வகுப்பில் ரூ.65 கழிக்கப்படும், மீதமுள்ள தொகை திருப்பி அளிக்கப்படும்.

✓ உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளில், திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரம் மற்றும் 12 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், மொத்தத் தொகையில் 25% வரை கழிக்கப்படும்.

✓ ரயில் புறப்படும் நேரத்திற்கு 4 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், டிக்கெட்டின் பாதித் தொகை அதாவது 50% கழிக்கப்படும்.

✓ ரயில் புறப்படும் நேரத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய முடியாவிட்டால், அதன் பிறகு ஒரு பைசா கூட திரும்பப் பெற முடியாது என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.