தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்!!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி,கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமான மழைக்கும்,தமிழகத்தின் பிற 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம், நாமக்கல்,ஈரோடு,விழுப்புரம், திருவண்ணாமலை,வேலூர், பெரம்பலூர்,திருச்சி,கரூர், கள்ளக்குறிச்சி, மற்றும் கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதைத் தவிர்த்து சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், அந்தமான், பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசக் கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.