கனமழையால் தத்தளிக்கும் மயிலாடுதுறை! இன்று இந்த பகுதிகளுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் சமீபத்தில் பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த பருவ மழை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அந்த பகுதிகளில் நிவாரண பணிகள் முடிக்கி விடப்பட்டிருக்கின்றன. நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக கனமழையின் காரணமாக, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகள் பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கின்றனர். வரலாறு காணாத அளவிற்கு பெய்து மழையின் காரணமாக, ஒட்டுமொத்த ஊரும் வெள்ளகாலாக காட்சியளித்து வருகிறது.

இப்படியான சூழ்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதால் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் இருக்கின்ற பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறக்கத்துள்ளார்.